இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், முதல் 2 ஆட்டங்களில் இந்திய அணி தோல்வியை தழுவியது. இதனால், இந்திய அணி மீது பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. இந்தநிலையில், 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, நாட்டிங்காமில் இன்று தொடங்குகிறது. முதல் 2 போட்டியிலும் இந்தியா தோல்வியை தழுவியதால், இந்திய அணியில் பல்வேறு அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. சுழல்பந்து வீச்சளர்களுக்கு பதிலாக, கூடுதலாக வேகப்பந்து வீச்சாளர்களை களமிறக்க திட்டமிடப்பட்டுள்ளது. சுழல்பந்து வீச்சாளராக அஸ்வின் மட்டும் இருக்கும் நிலையில், வேகப்பந்து வீச்சளராக பும்ரா, இஷாந்த் சர்மா, முகமது ஷமி, ஹர்திக் பாண்டியா ஆகியோர் களமிறங்க உள்ளனர். 3வது டெஸ்ட் போட்டியில் வெற்றிப் பெறும் முனைப்புடன், இந்திய அணி களமிறங்க உள்ளது. அதேவேளையில், 3வது டெஸ்ட் போட்டியிலும் வென்று, தொடரை கைப்பற்றும் முனைப்பில் இங்கிலாந்து அணி தீவிரம் காட்டும் என்பதால், போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வெற்றி பெற வேண்டுமென்ற முனைப்பில் இந்திய அணி
-
By Web Team
- Categories: TopNews, செய்திகள், விளையாட்டு
- Tags: இங்கிலாந்துஇந்திய அணி
Related Content
யூரோ கோப்பையை தட்டித்தூக்கிய இத்தாலி - இங்கிலாந்தின் கனவை தகர்த்தது
By
Web Team
July 12, 2021
40+ நாடுகளின் உதவியுடன் கொரோனாவோடு போராடும் இந்தியா
By
Web Team
April 30, 2021
இந்திய அணிக்கு இனி தோனி தேவையில்லை - சேவாக் அதிரடி!
By
Web Team
March 18, 2020
ஐரோப்பிய யூனியன், துருக்கி, இங்கிலாந்து பயணிகளுக்கு இந்தியா வர தடை: மத்திய அரசு
By
Web Team
March 17, 2020
ஐ.சி.சி. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி: இந்திய அணி முதல் தோல்வி
By
Web Team
February 25, 2020