தொழில் தொடங்க உகந்த நாடுகள் பட்டியல் – இந்தியா 23 இடங்கள் முன்னேற்றம்

தொழில் தொடங்க உகந்த நாடுகளின் பட்டியலில் இந்தியா, கடந்த ஆண்டை விட 23 இடங்கள் முன்னேறியுள்ளது.

தொழில் தொடங்க உகந்த சூழல் உள்ள நாடுகளின் பட்டியலை உலக வங்கி ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டும் அந்த பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் இந்தியா 77-வது இடத்தை பிடித்துள்ளது. கடந்த ஆண்டு இந்தியா 100-ஆவது இடத்தில் இருந்தது.

இந்த ஆண்டு வெளியிடப்பட்ட பட்டியலில் இந்தியா 23 இடங்கள் முன்னேறி 77-ஆவது இடத்தை பிடித்துள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, நாங்கள் ஆட்சிக்கு வந்தபோது, இந்த தரவரிசையில் முதல் 50 இடங்களுக்குள் இடம்பிடிக்க முயற்சித்ததாக கூறினார்.

இந்த தரவரிசையில் அனைத்து பிரிவுகளிலும் எவ்வாறு முன்னேற்றம் அடைய முடியும் என்பதை தொழில் கொள்கை மற்றும் மேம்பாட்டுத் துறை தீவிரமாக ஆராய்ந்து வருவதாககவும் அவர் தெரிவித்தார்.

Exit mobile version