உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சி பட்டியலில் இந்தியா இங்கிலாந்தை பின்னுக்கு தள்ளி 5-வது இடத்தை பிடித்து உள்ளது.
சர்வதேச நிறுவனமான BWC உள்ளூர் உற்பத்தி வளர்ச்சி விகிதத்தை அடிப்படையாக கொண்டு உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சி குறித்த பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் இந்தியா 2019 ஆம் ஆண்டு உலகின் மிகப்பெரிய பொருளாதார தரவரிசையில் இங்கிலாந்தை விட முன்னணியில் உள்ளது.
2018-ம் ஆண்டு 7-வது இடத்தில் இருந்த இந்தியா இங்கிலாந்தை பின்னுக்கு தள்ளி 5-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இதன்மூலம் பணக்கார நாடுகள் பட்டியலில் இந்தியா இடம் பெற்றுள்ளது.
பொருளாதார வளர்ச்சியில் முன்னேற்றத்துடன் அமெரிக்கா பணக்கார நாடுகளின் பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. சீனா 2-வது இடத்திலும், ஜப்பான், ஜெர்மனி ஆகியவை 3 மற்றும் 4-வது இடத்திலும் உள்ளன.