தொழில் தொடங்க உகந்த நாடுகளுக்கான, உலக வங்கியின் தரவரிசைப் பட்டியலில் 14 இடங்கள் முன்னேறி இந்தியா, 63-வது இடத்தைப் பிடித்துள்ளது.
2014 ஆம் ஆண்டில் தொழில் தொடங்க உகந்த நாடுகள் பட்டியலில் 142-வது இடத்தில் இந்தியா இருந்து வந்தது. இந்நிலையில் 2018ல் 100-வது இடத்திற்கு முன்னேற்றம் கண்டது. தொடர்ந்து முன்னேற்றம் கண்ட இந்தியா, தற்போது உலக வங்கி வெளியிட்டுள்ள 2020-ஆம் ஆண்டிற்கான தரவரிசைப் பட்டியலில் 14 இடங்கள் முன்னேறி 63-வது இடத்தில் உள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் தொழில் தொடங்க உகந்த சூழலை உருவாக்குவதற்காக, சிறப்பாக செயல்படும் நாடுகள் பட்டியலில் மூன்றாவது ஆண்டாக இந்தியா முதல் 10 இடங்களில் உள்ளது குறிப்பிடத்தக்கது.