அதிநவீன ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்தது இந்தியா

இந்தியாவின் அதிநவீன விரைவு பதிலடி ஏவுகணை வெற்றிகரமாக செலுத்தி பரிசோதிக்கப்பட்டது.

ஒடிசா மாநிலம் சாந்திப்பூரில் உள்ள ஒருங்கிணைந்த ஏவுகணை சோதனை தளத்தில் இருந்து, இந்தியாவின் அதிநவீன விரைவு பதிலடி ஏவுகணை சோதனை செலுத்தப்பட்டது. தரையில் இருந்து பாய்ந்து சென்று வானில் உள்ள இலக்கை தாக்கவல்ல இந்த ஏவுகணையை இந்திய ராணுவத்துக்காக, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் வடிவமைத்துள்ளது. எந்த வானிலையிலும், எந்த நிலப்பரப்பிலும் இந்த ஏவுகணையை பயன்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

25 முதல் 30 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இலக்கை தாக்கக்கூடிய சக்தி படைத்த இந்த ஏவுகணை, ரேடார்களால் செயலிழக்கச் செய்ய முடியாத அளவுக்கு மின்னணு தடுப்பு வசதிகள் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version