மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங்கை தேர்வு செய்தது.
இதனையடுத்து மேற்கிந்திய தீவுகள் அணி களமிறங்கியது. அந்த அணியின் ஷாய் ஹோப் 14 ரன்னும், ராம்டின் 2 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்த வந்த வீரர்களும் சொற்ப ரன்களில் ஆட்டம் இழக்க அந்த அணி, 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 109 ரன்கள் எடுத்தது.
இதனைத் தொடர்ந்து இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ரோகித் சர்மா 6 ரன்னிலும், ஷிகர் தவான் 3 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இதனால் இந்திய அணி தடுமாறிய நிலையில், லோகேஷ் ராகுல் 16 ரன் எடுத்த ஆட்டமிழந்தார்.
தினேஷ் கார்த்திக் அதிகபட்சமாக 31 ரன்னும், கர்னல் பாண்டியா 21 ரன்னும் குவித்து இந்திய அணிக்கு வெற்றி தேடித் தந்தனர். 17. 5 ஓவர் முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 110 ரன்கள் எடுத்து, டி 20 தொடரில் முதல் வெற்றியை பதிவு செய்தது.