ரஷ்ய நாட்டிடம் இருந்து அணு சக்தி கப்பலை 10 ஆண்டுகளுக்கு குத்தகைக்குப் பெற இந்திய பாதுகாப்புத்துறை ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியா தனது கடற்படை பலத்தை அதிகரிப்பதற்காக, தற்போது ரஷ்யாவிடம் இருந்து அணுசக்தி கப்பலை பெறுவதற்கான ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் எஸ் 400 என்ற ஏவுகணை அமைப்பைப் பெறுவதற்கான ஒப்பந்தத்தை இந்தியா மேற்கொண்டது. இதனால் இந்தியா மீது பொருளாதார தடை விதிக்கப்படும் என்று அமெரிக்கா அச்சுறுத்தல் விடுத்தது.
இந்த நிலையில், ரஷ்யாவிடம் இருந்து, அணுசக்தி நீர்மூழ்கி கப்பலை பெறுவதற்கான ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டுள்ளது. இந்திய கடற்படைக்கு ரஷ்யாவிடம் இருந்து குத்தகைக்குப் பெறும் 3-வது கப்பல் இதுவாகும்.