இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கு இடையே நடந்து வரும் நான்காவது டெஸ்ட் போட்டியின் நான்காவது நாள் ஆட்டமானது கிட்டத்தட்ட முடியும் தருவாயில் உள்ளது. இந்தியா 571 ரன்களுக்கு ஐந்து விக்கெட்டினை இழந்துள்ளது. அதிகபட்சமாக விராட் கோலி 186 ரன்கள் அடித்தார். இது டெஸ்ட் கிரிக்கெட்டில் அவரது 28வது சதமாகும். இதன்மூலம் 75வது சர்வதேச சதத்தினை விராட் கோலி பூர்த்தி செய்தார். கோலிக்கு துணையாக முதலில் பரத் 44 ரன்கள் அடித்து கைகொடுத்தார். பிறகு அக்சர் படேல் கோலியுடன் கைக்கோர்த்து அதிகபட்சமாக 79 ரன்கள் எடுத்து தன்னுடைய விக்கெட்டினை இழந்தார். ஷ்ரேயாஸ் ஐயர் காயம் காரணமாக களத்திற்கு வரவில்லை. நாதன் லியானும், டாட் மர்பியும் அதிகபட்சமாக தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
இந்த பார்டர் கவாஸ்கர் போட்டியில், இந்த நான்காவது ஆட்டமே மூன்று நாட்களைக் கடந்து சென்றுகொண்டிருக்கிறது. இது ஐந்தாம் நாள் வரை செல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது நடக்கவிருக்கிறது. மேலும் இந்த டெஸ்ட் போட்டி டிரா ஆவதற்கே அதிக வாய்ப்பு உள்ளது என்று சொல்லப்படுகிறது. தற்போது 91 ரன்கள் பின்னடைவாக உள்ள ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்து வருகிறது.