ஓவல் மைதானத்தில்..ஒடிசா ரயில் விபத்துக்கு மவுன அஞ்சலி செலுத்திய இந்திய கிரிக்கெட் வீரர்கள்!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிக்கு இடையே லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியானது நடைபற்று வருகிறது. இந்த ஆட்டத்தில் அஸ்வின் சேர்த்துக்கொள்ளப்படவில்லை. டாஸ் வென்ற இந்திய அணியானது பந்துவீச்சைத் தேர்வு செய்தது. பின்னர் தேசிய கீதம் ஒலிக்கப்பட்டபோது, வரிசையாக நின்ற இந்திய வீரர்கள்,  சிறிது நிமிடங்கள் ஒடிசா ரயில் விபத்துக்கு மவுன அஞ்சலி செலுத்தினார்கள். மேலும் இன்றைய போட்டியில் கருப்புப் பட்டை அணிந்து விளையாடி வருகிறார்கள்.

தற்போது வரை ஆஸ்திரேலியா அணியானது இருபத்து ஆறு ஓவர்களுக்கு 85 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகள் இழந்துள்ளது. இந்தியா சார்பாக, சிராஜ், ஷமி, தாக்கூர் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தியுள்ளனர்.

Exit mobile version