பூ சந்தையில் பூக்கள் வரத்து அதிகரித்ததால் விலை குறைவு

தேனி பூ சந்தையில் பூக்கள் வரத்து அதிகரித்ததால் விலை குறைந்துள்ளது.

தேனி மாவட்டத்தில் ஆண்டிபட்டி, போடி, தேவாரம், கம்பம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள தோட்டங்களில் பூக்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. குறிப்பாக மல்லிகை, முல்லை, செவ்வந்தி, செண்டுமல்லி, சாமந்தி உள்ளிட்ட பல வகை பூச்செடிகள் பயிரிடப்பட்டுள்ளன. இந்த நிலையில் வெயிலின் தாக்கத்தால், பூக்கள் விளைச்சல் அதிகரித்துள்ளது. இதனால் விலை சரிந்துள்ளது. எனவே, உரிய விலை கிடைக்காமல் விவசாயிகளும், வியாபாரிகளும் வேதனையில் உள்ளனர்.

Exit mobile version