திருப்பூர் மாவட்டம் உடுமலை அமராவதி வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.
மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள, உடுமலை, அமராவதி, மானாம்பள்ளி, வால்பாறை பொள்ளாச்சி, உலாந்தி உட்பட்ட ஆறு வனச்சரக பகுதிகளில், 947 சதுர கிலோ மீட்டர் கொண்ட பகுதிகள், ஆனைமலை புலிகள் காப்பகமாக பாதுகாக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது பருவமழை துவங்கியுள்ளதால், மலைப்பகுதிகளில் இருந்து கொட்டும் அருவிகளையும், திருமூர்த்தி அணைகளில் வரும் வெள்ளப்பெருக்கை காணவும், அமராவதி முதலைப் பண்ணையில் உள்ள அரிய வகை முதலைகளை காணவும் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. இங்கு நல்ல இயற்கை சூழல் நிலவுவதோடு பல்வேறு அறிய வகை உயிரினங்களை கண்டு களிப்பதாக சுற்றுலாப்பயணிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.