செவிலியர் அலட்சியத்தால் குழந்தையின் கைவிரல் துண்டான சம்பவம்-மாநில மனித உரிமை ஆணையம் விசாரணை

தஞ்சாவூர் மாவட்டம் காட்டூர் பகுதியை சேர்ந்த கணேசன்-பிரியதர்ஷினி தம்பதிக்கு தஞ்சை அரசு மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு ஊசி மூலம் குளுக்கோஸ் ஏற்றப்பட்டு வந்த நிலையில் டிஸ்சார்ஜ் செய்வதற்காக பேண்டேஜை செவிலியர் கத்தரிக்கோலால் அகற்றியுள்ளார். செவிலியர் அலட்சியத்தால் குழந்தையின் கட்டைவிரல் துண்டானது. இதையடுத்து துண்டான கட்டை விரல் குழந்தையின் கையில் மீண்டும் பொருத்தப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்த மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் சித்தரஞ்சன் மோகன்தாஸ், மருத்துவ கல்வி இயக்குனர் இரண்டு வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.

Exit mobile version