தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை

வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதால் சென்னை, புதுச்சேரி, தேனி, நீலகிரி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இந்தநிலையில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இரவு முழுவதும் மழை பெய்தது. தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியது. சாலைகளில் மழை நீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.  மலைப்பகுதிகள் அடங்கிய மாவட்டங்களான கோவை, நீலகிரி, நெல்லை, தேனி மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  மீனவர்கள் வடக்கு வங்கக் கடல், மத்திய வங்கக் கடல் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளுக்கு அடுத்த இரு தினங்களுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Exit mobile version