கருணாநிதி இல்லாத தமிழ்நாட்டை நினைத்துப் பார்க்க முடியவில்லை -நடிகர் ரஜினிகாந்த்

சென்னையில் நடிகர் சங்கம் சார்பில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின், நடிகர் ரஜினிகாந்த் மற்றும் திரைத்துறை சேர்ந்த பல்வேறு பிரபலங்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில்  பேசிய ரஜினிகாந்த், கடந்த 50 ஆண்டுகளில் பல சூழ்ச்சிகளை கடந்து, கட்சியை பலப்படுத்தியவர் கருணாநிதி என்று தெரிவித்தார்.  எம்ஜிஆரையும், சிவாஜியையும்  ஒரே படத்தில் ஸ்டாராக மாற்றிய பெருமை கருணாநிதியின்  வசனம் என்று குறிப்பிட்டார்.  மெரினாவில் கருணாநிதிக்கு இடம் கொடுக்காமல் போயிருந்தால், தானே களத்தில் இறங்கி போராடியிருப்பேன் என்றும் ரஜினி தெரிவித்தார்.
Exit mobile version