ராமநாதபுரத்தில் தேர்தல் விதிக்கு முரணாகச் செயல்பட்ட திமுகவினர்

கமுதியில் வேட்பு மனு பரிசீலனையின் போது திமுக வேட்பாளரின் கணவர், தேர்தல் அதிகாரியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட 17ஆவது வார்டு கவுன்சிலர் பதவிக்கான வேட்புமனு பரிசீலனை நடந்தது. இதில் அ.தி.மு.க., தரப்பில் பாண்டியம்மாளும், தி.மு.க., தரப்பில் ராமலட்சுமியும் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர். மேலும் 12 பேரும் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். தி.மு.க. வேட்பாளர் ராமலட்சுமிக்கு, வேட்புமனுவை ஏற்றுக் கொண்டதற்கான, ஒப்புகைச் சீட்டு வழங்கக்கோரி, அவர் கணவர் செந்தூரான், தேர்தல் நடத்தும் உதவி அலுவலர் செல்வராஜிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். தேர்தல் அதிகாரியைப் பணி செய்ய விடாமல் தேர்தல் விதிக்கு முரணாகச் செயல்பட்டதால் அங்குச் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Exit mobile version