கிழக்கு பிராந்திய பொருளாதாரக் கூட்டமைப்பின் மாநாட்டில் பங்கேற்பதற்காக ரஷ்யா சென்ற பிரதமர் மோடி மலேசிய பிரதமர் சந்தித்து பல்வேறு விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்த சந்திப்பின் போது காஷ்மீர் விவகாரம், இஸ்லாமிய மத போதகர் ஜாகீர் நாயக்கை இந்தியாவிடம் ஒப்படைப்பது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த சந்திப்பு குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள மோடி, மலேசியப் பிரதமருடனான சந்திப்பு மிகவும் ஆக்கப்பூர்வமான வகையில் அமைந்திருந்தது.
இருதரப்பு உறவுகளை பலப்படுத்துவது குறித்தும், பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை அதிகரிப்பது தொடர்பாகவும் விரிவாக ஆலோசனை நடத்தியதாக குறிப்பிட்டுள்ளார்.
இந்த சந்திப்பின்போது, இந்தியாவில் பண மோசடி மற்றும் பயங்கரவாதத்தைத் தூண்டும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு தப்பியோடி மலேசியாவில் தஞ்சமடைந்துள்ள ஜாகீர் நாயக்கை இந்தியாவிடம் ஒப்படைப்பது குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது என்றும் குறிப்பிட்டுள்ளார். இதைத் தொடர்ந்து ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேவைச் சந்தித்த மோடி பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார்