கேரள மாநிலத்தில் வரலாறு காணாத வெள்ளத்தால் மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. காசர்கோடு மாவட்டத்தை தவிர்த்து 13 மாவட்டங்களில் அபாயஎச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மீட்பு பணிக்காக அனுப்பப்பட்ட 5 கடற்படை கப்பல்கள் கொச்சி சென்றடைந்தன. தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனத்தின் 24 குழுக்கள் வெள்ளம் பாதித்த கிராமங்களில் நிவாரண பணிகளை மேற்கொண்டு வருகின்றன. இந்திய கடற்படை வீரர்கள் வெள்ளத்தில் சிக்கிய ஆயிரத்து 764 பேரை பத்திரமாக மீட்டுள்ளனர். இந்நிலையில், திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த, முதலமைச்சர் பினராயி விஜயன் பலி எண்ணிக்கை 167 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவித்தார். மீட்பு மற்றும் நிவாரண பணிகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் கூறினார்.