உயரும் அணையின் நீர்மட்டம் – இடுக்கி அணை திறக்கப்பட வாய்ப்பு

கனமழையால் இடுக்கி அணையில் நீர்மட்டம் உயர்ந்து வரும் நிலையில், புளு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால் இடுக்கி அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. அணையின் மொத்த நீர்மட்டமான 2,403 அடியில், தற்போது 2,390 அடியை எட்டியுள்ளது. தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து, நீர்மட்டம் உயர்ந்து 2,399 அடியை எட்டினால், அணை திறந்துவிடப்படும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதனால் எர்ணாகுளத்தில் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. 2018ஆம் ஆண்டு இடுக்கி அணை நிரம்பியதால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருந்தது. இதனால் அணை நிலவரத்தை உன்னிப்பாக கவனித்து வரும் கேரள அரசு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளது..

Exit mobile version