தமிழ்நாட்டில் அடுத்த 4 நாட்களுக்கு மழை… 3 மாவட்டங்களில் கனமழை

தமிழ்நாட்டில் அடுத்த 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வளிமண்டத்தில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 4 நாட்களுக்கு தென் தமிழகத்திலும், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளிலும் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால், கேரளா, தெற்கு கார்நாடகா உள்ளிட்ட பகுதிகளில் ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் பலத்த காற்று மற்றும் இடி, மின்னலுடன் கனமழை பெய்யும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Exit mobile version