கேரளாவில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யபட்டு கொல்லப்பட்ட வழக்கில் விசாரணை தீவிரம்

கேரளாவில், 6 வயது சிறுமி, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டவரை, சம்பவ இடத்திற்கு அழைத்துச் சென்று காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் வண்டிப்பெரியார் அருகே, தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட 6 வயது சிறுமி மர்மமான விதத்தில் உயிரிழந்தார். உடற்கூராய்வில், அந்த சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. இந்த வழக்கில், அதே பகுதியைச் சேர்ந்த அர்ஜுன் என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர். இந்நிலையில், குற்றவாளியை விசாரணைக்காக சம்பவ இடத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அப்போது, சிறுமியை கயிற்றால் இறுக்கி கொலை செய்துவிட்டு, ஐன்னல் வழியாக எப்படி தப்பிச் சென்றார் என்பதை நடித்து காண்பிக்க செய்தனர். அப்போது, குற்றம் சுமத்தப்பட்டுள்ள அர்ஜுனை, குழந்தையின் பெற்றோர் தாக்க முயன்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Exit mobile version