மும்பையில் மீண்டும் கனமழை – தாழ்வான இடங்களில் தேங்கிய தண்ணீர்

மும்பையில் மீண்டும் கனமழை பெய்து வருவதால் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கி காணப்படுகிறது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் தென் மேற்கு பருவமழை தொடங்கியதை அடுத்து மும்பை, நாக்பூர், சந்திராபூர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. கடந்த திங்கட்கிழமை முதல் பெய்து வரும் கனமழையால் மும்பை, தானே, பன்வேல், டொம்பிவலி உள்ளிட்ட பகுதிகள் வெள்ளத்தில் தத்தளித்தன. இந்த பகுதிகளில் 12 மணிநேரத்தில் சுமார் 300 மில்லி மீட்டர் மழை பதிவான நிலையில், நேற்று மழை இல்லாததால், தண்ணீர் வடிய தொடங்கி, மும்பை படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பியது.

இந்த நிலையில், இன்று அதிகாலை முதலே மும்பையில் மீண்டும் கனழை பெய்து வருகிறது. இதனால், சாலைகள் மற்றும் தாழ்வான இடங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. அந்தேரி சுரங்கப் பாதையில் மீண்டும் தண்ணீரின் அளவு அதிகரித்துள்ளதால், வாகனப் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. காந்தி மார்க்கெட், தாதார் பிளாசா ஆகிய இடங்களில் செயல்படும் காய்கறி சந்தையில் தண்ணீர் தேங்கிய நின்றதால், காய்கறிகளை வாங்க முடியாமல் மக்கள் பரிதவித்தனர்.

Exit mobile version