எதார்த்தமான நடிப்பால் ரசிகர்களை ஈர்த்த செளஃபின் சாஹிர் பிறந்தநாள் இன்று!

இயக்குநர் கனவோடு மலையாள சினிமா உலகில் அடியெடுத்து வைத்த செளஃபின் சாஹிர், தனது யதார்த்தமான நடிப்பால் ரசிகர்களை கட்டிப்போடும் ராட்சசனாக உருவெடுத்தது வெறும் கதையன்று. அந்த மாயாஜாலத்தை திரையில் நிகழ்த்திக் காட்டியவர் செளபின் சாஹிர். 

கேரளாவின் கொச்சின் மாவட்டத்தில், 1983 ஆம் ஆண்டு பிறந்த செளபின் சாஹிர், கல்லூரியில் முதல் வருட படிப்புடன் நிறுத்திவிட்டு, சினிமாவுக்கு ஓடி வந்தவர், 2003-ல் சித்திக் இயக்கிய ‘குரோனிக் பேச்சிலர்ஸ்’ என்ற படத்தில் உதவி இயக்குநராக வேலை பார்த்துள்ளார். மலையாள சினிமாவின் முன்னணி இயக்குநர்களான பாசில், ரபி மெக்கார்டியன், அமல் நீரத் ஆகியோரிடம் உதவி இயக்குநராக வேலை பார்த்தவர் செளபின். 2013 ஆம் ஆண்டு ‘அன்னையும் ரசூலும்’ என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். சிறிய வேடங்களில் நடித்துக் கொண்டிருந்த செளபினுக்கு, 2015-ல் வெளியான ‘பிரேமம்’ படம் மிகப் பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அப்படத்தில் அவர் நடித்திருந்த பி.டி மாஸ்டர் கேரக்டரை அவ்வளவு எளிதாக யாரும் மறந்துவிட முடியாது.

தொடர்ந்து ‘சார்லி’, மஹேஷிண்டே பிரதிகாரம்’, ‘கம்மாட்டிப்பாடம்’. ‘பாப்கார்ன்’ என பல வெற்றிப் படங்களில் நிறைவான பங்களிப்பை தந்து கொண்டிருந்தவர், தான் ஒரு அகாய சூரன் என்பதை அடுத்தடுத்து இரண்டு படங்களில் நிரூபித்தார். அவைகள் ‘சூடானி ஃப்ரம் நைஜீரியா’ (sudani from nigeria), ‘கும்பளங்கி நைட்ஸ்’ (kumbalangi nights), இந்த படங்களில் செளபினின் கேரக்டர்கள் காலத்துக்கும் நிலைத்து நிற்கக் கூடிய வகையில் அவருக்கு பெயர் பெற்றுக் கொடுத்தது.

இதனை தொடர்ந்து செளபின் நடித்த ‘அம்பிளி’ (Ambili) படமும், ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. தன்னுடன் நடிக்கும் நடிகர்கள் திரையுலகில் உச்சம் தொட்டவராக இருந்தாலும், அவர்களுடன் சரிக்கு சமமாக தனி முத்திரை பதிப்பதில் செளபின் சாஹிர் நடிப்பில் ராட்சசன் என்பதில் சந்தேகமும் இல்லை. இதனிடையே 2017-ல் வெளியான ‘பறவ’ (parava) படத்தின் மூலம், மிகவும் பிடித்தமான டைரக் ஷனிலும் தனது பயணத்தை துவங்கியுள்ளார் செளபின் சாஹிர்.

Exit mobile version