மகாராஷ்டிரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் மழை காரணமாக, விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதால், வெங்காயத்தின் விலை அதிகரித்து வருவதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னை கோயம்பேடு காய்கறி சந்தைக்கு வெங்காய வரத்து குறைந்துள்ளதால், அதன் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. மகாராஷ்டிரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலஙகளில் இருந்து வழக்கமாக நாள் ஒன்றுக்கு 55 லாரிகள் முதல் 60 லாரிகள் வந்து கொண்டிருந்த நிலையில், தற்போது, அந்த மாநிலங்களில் மழை காரணமாக உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக வரும் வெங்காய வரத்து 23 லாரிகளாக குறைந்துள்ளாது.
இதனால் மொத்த விலையில் கிலோவுக்கு 72 ரூபாய் வரை விற்பனையாகிறது. சில்லரை விலையாக 80 ரூபாயை தாண்டியுள்ளது. அதுமட்டுமின்றி, மகாராஷ்டிரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதும், இந்த விலை உயர்வுக்கு காரணம் என்று கூறப்படுகிறது.