எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி கே.பழனிசாமி, ஆளுநரை நேரில் சந்தித்து புகாரளித்ததையடுத்து, சென்னையில் சட்ட விரோதமாகவும், உரிய அனுமதியின்றியும் இயங்கி வந்த மதுபான கூடங்கள் தொடர்ந்து மூடப்பட்டு வருகின்றன.
சென்னையில் இயங்கக்கூடிய 900-க்கும் அதிகமான மதுபானக் கூடங்களில், 50-க்கும் குறைவானவை மட்டுமே உரிய அனுமதியோடு இயங்குவதாக எதிர்க்கட்சித் தலைவரும், கழக பொதுச் செயலாளருமான எடப்பாடி கே.பழனிசாமி, ஆளுநரை சந்தித்து புகார் மனு அளித்திருந்தார். இதனையொட்டி, கடந்த இரண்டு நாட்களாக சென்னையில் சட்டவிரோதமாக இயங்கி வந்த மதுபான கூடங்கள் மூடப்பட்டு வருகின்றன. இந்நிலையில் விடியா திமுக அரசின் நடவடிக்கைகளால் மது அருந்த இடமில்லாமல் கடும் இன்னல்களை சந்தித்து வருவதாக, மதுப்பிரியர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். மேலும் மதுபானங்கள் கூடுதல் விலைக்கு விற்கப்படுவது குறித்து விடியா திமுக அரசிடம் புகாரளிப்பது, செவிடன் காதில் சங்கூதிய கதையாகவே தொடர்வதாகவும் மனம் நொந்து புலம்பி வருகின்றனர்.
Discussion about this post