இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் படேலின் பிறந்தநாளையொட்டி, அவரது சேவைக்கு தலைவணங்குவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சரும், சுதந்திர போராட்ட வீரருமான சர்தார் படேலின் பிறந்தநாள் நாடு முழுவதும் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, உலகின் மிக உயரமான சிலையை பிரதமர் மோடி இன்று திறந்து வைகிறார். இதனிடையே, சர்தார் படேலை நினைவு கூறும் விதமாக, பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் புகழாரம் சூட்டியுள்ளார்.
இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் படேலின் சேவைக்கு தலை வணங்குகிறேன் என்றும், இந்தியாவை ஒருங்கிணைத்ததோடு, நாட்டுக்காக ஓய்வின்றி உழைத்தவர் படேல் என்றும் மோடி டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.