தான் ஏழைகளின் சாதியை சார்ந்தவன் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலம் சொன்பத்ராவில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய அவர், 21 ஆண்டுகளுக்கு முன்பு இதேநாளில் இந்தியா அணு ஆயுத சோதனையை வெற்றிக்கரமாக செய்து காட்டியதாக கூறினார். கடின உழைப்பின் மூலம் தேசத்திற்கு பெருமையை தேடி தந்த விஞ்ஞானிகளுக்கு தலை வணங்குவதாக கூறிய பிரதமர் நரேந்திர மோடி, அணு ஆயுத சோதனைக்கான திறன் இருந்தும் வாஜ்பாய்க்கு முந்தைய அரசுகள் அதனை செய்ய துணியவில்லை என தெரிவித்தார்.
இந்தநிலையில் தான் எந்த சாதியை சார்ந்தவன் என எதிர்க்கட்சிகள் கேட்க துவங்கிவிட்டதாக அவர் கூறினார். இந்த தேசத்தில் உள்ள ஏழைகளின் சாதியை சார்ந்தவன் தான் என கூறிய பிரதமர் நரேந்திர மோடி, யாரெல்லம் ஏழையாக இருக்கின்றார்களோ தான் அவர்களை சார்ந்தவன் என்றும் தெரிவித்தார்.