கேரளாவில் மகளிர் மனித சுவர் போராட்டம் : 620 கி.மீ.க்கு பெண்கள் கைகளை இணைத்து சாலையோரம் நின்றனர்

கேரளாவில் நடைபெற்று வரும் மகளிர் மனித சுவர் போராட்டத்தில், 30 லட்சத்திற்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர். சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் இளம்பெண்களை அனுமதிக்க வலியுறுத்தியும், வழிபாட்டில் சீர்த்திருத்தங்களை மக்கள் ஏற்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தும், கேரளாவில் மகளிர் மனித சுவர் போராட்டம் நடத்தப்பட்டது.

இந்தப் போராட்டத்தை அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன், தொடங்கி வைத்தார், காசர்கோடில் இருந்து திருவனந்தபுரம் வரை 620 கிலோ மீட்டர் தொலைவுக்கு மனித சுவர் போராட்டம் நடத்தப்பட்டது. பெண்கள் கைகளை கோர்த்து சங்கிலி போன்று சாலையோரம் நின்றார்கள்.

ஒவ்வொரு பகுதியிலும், அந்த பகுதியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் பெண்களை வழி நடத்தினார்கள். இந்த போராட்டத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்தத் தலைவர் பிருந்தா காரத் உள்பட 30 லட்சத்திற்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர். இந்தப் போராட்டத்தை ஒட்டி விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.

Exit mobile version