தோட்டக்கலை பயிர் விவசாயிகள் காப்பீடு செய்ய அறிவுறுத்தல்

தமிழகம் முழுவதும் உள்ள தோட்டக்கலை பயிர் விவசாயிகள் பிப்ரவரி 28-ம் தேதிக்குள் பயிர் காப்பீடு செய்ய வேண்டும் என வேளாண் துறை அறிவுறுத்தியுள்ளது. வாழை, மரவள்ளி, வெங்காயம், உருளை, மற்றும் மிளகாய் ஆகிய 5 பயிர்களும் ரபி பருவத்தில் பயிர் செய்யப்படுகின்றன. இவற்றுக்கான பயிர் காப்பீடு கடந்த அக்டோபர் மாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதுவரை 21 ஆயிரம் விவசாயிகள் 7ஆயிரத்து 51 ஹெக்டேர் நிலப்பரப்பிற்கான பயிர்களுக்கு காப்பீடு செய்துள்ளதாக வேளாண் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பிப்ரவரி 28-ம் தேதி தோட்டக்கலை பயிர்களுக்கு காப்பீடு செய்யும் அவகாசம் முடிவடைய உள்ளதால், அதற்குள் அனைத்து தோட்டக்கலை பயிர் விவசாயிகளும் காப்பீடு செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Exit mobile version