வன்முறையைத் தடுக்க ஹாங்காங் மக்கள் ஒத்துழைக்க வேண்டும்: சீனா

ஹாங்காங்கில் கடந்த சில வாரங்களாக நடைபெற்று வரும் போராட்டங்கள் மற்றும் வன்முறைகளை தடுப்பதற்கு ஒத்துழைக்குமாறு அந்நாட்டு மக்களுக்கு சீனா அழைப்பு விடுத்துள்ளது.

ஹாங்காங்கில் கைது செய்யப்பட்டவர்களை சீனாவுக்கு நாடு கடத்த வகை செய்யும் சர்ச்சைக்குரிய சட்ட மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஹாங்காங்கில் கடந்த ஜூன் மாதம் தொடக்கத்தில் இருந்து தீவிர போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த ஹாங்காங் விவகாரங்களுக்கான சீன அரசின் செய்தித் தொடர்பாளர் ஹாங்காங்கில் போராட்டக்காரர்கள் சிலர் உருவாக்கும் பிரச்னைகளால், நாட்டின் ஒட்டுமொத்த மக்களின் நலன் பாதிக்கப்படுகிறது. அரசுக்கு எதிராக போராடுகிறோம் என்ற பெயரில் மக்களின் நிம்மதியை சிலர் கெடுக்கின்றனர்.

சட்டத்தின் அடிப்படையில் செயல்படும் யாரும் இந்தப் போராட்டங்களைப் பார்த்து பொறுத்துக் கொண்டிருக்க மாட்டார்கள். அதனால், மக்கள் அனைவரும், இந்த போராட்டங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க ஒத்துழைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

Exit mobile version