ஹாங்காங்கில் குற்றவாளிகளை சீனாவுக்கு கடத்தி விசாரிக்கும் மசோதா ரத்து

ஹாங்காங்கில் வரலாறு காணாத போராட்டங்களுக்கு காரணமான சர்ச்சைக்குரிய மசோதா ரத்து செய்யப்படும் என அந்நாட்டின் நிர்வாகத் தலைவர் கேரி லாம் அறிவித்துள்ளார்.

ஹாங்காங்கில் குற்றவாளிகளை சீனாவுக்கு நாடு கடத்திச் சென்று விசாரணை நடத்த வழிவகை செய்யும் சட்டத்திருத்த மசோதா கொண்டு வரப்பட்டது. இதனை எதிர்த்து அந்நாட்டில் கடந்த ஜூன் மாதம் முதல் பெரும் வன்முறைகள் நடைபெற்றதுடன், போராட்டங்கள் வெடித்தன. அதனைத் தொடர்ந்து அந்த மசோதா தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக ஹாங்காங் நிர்வாகம் அறிவித்தது.

இருப்பினும் மசோதாவை முழுமையாக திரும்பப் பெற வலியுறுத்தி போராட்டங்கள் நீடித்து வந்தன. இதனால் அமைதியற்ற சூழல் நிலவி வந்தததையடுத்து சர்ச்சைக்குரிய மசோதாவை முழுமையாக ரத்து செய்ய இருப்பதாக ஹாங்காக் நிர்வாக தலைவர் கேரி லாம் அறிவித்துள்ளார். சீன அரசு நிர்வாகிகள், ஹாங்காங் எம்பிக்களுடன் ஆலோசித்த பிறகு இதனை அவர் அறிவித்தார். இதனால் விரைவில் அதிகாரப்பூர்வமான அரசு அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version