ஹாங்காங்கில் நடந்து வரும் போராட்டத்தில் அடுத்தடுத்து நிகழும் வன்முறைச் சம்பவங்களால் அந்நாட்டு அரசு கவலை அடைந்துள்ளது.
கிரிமினல் குற்றவாளிகளை சீனாவுக்கு அழைத்துச் சென்று விசாரிக்கும் நடைமுறைக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஹாங்காங்கில் கடந்த சில மாதங்களாக தொடர் போராட்டம் நடந்து வருகிறது. ஆர்பாட்டத்தில் ஈடுபடும் பொதுமக்கள் வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டதை அடுத்து, காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டு, துப்பாக்கிச் சூடு நடத்தி போராட்டத்தை கலைத்து வருகின்றனர்.
காவல்துறையின் தாக்குதலுக்கு எதிராக வில் அம்புகளில் தீ வைத்து எய்து விடும் போராட்டக்காரர்கள் பெட்ரோல் குண்டுகளையும் வீசி வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், தொடர்ந்து அதிகரித்து வரும் வன்முறை சம்பவங்களால் ஹாங்காங் மற்றும் சீன அரசுகள் கவலை அடைந்துள்ளன.