உலகிலேயே மாணவர்களுக்கான கல்வி தொலைக்காட்சி தமிழகத்தில் தான் முதல் முறையாக தொடங்கப்பட்டுள்ளது.இந்த கல்வி தொலைக்காட்சி திட்டமானது இந்திய அளவில் கல்வித்துறையில் சிறந்த எடுத்துக்காட்டாக இருக்கும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் கல்வி தொலைக்காட்சி தொடக்க விழா நடைப்பெற்றது.கல்வி தொலைக்காட்சியின் ஒளிபரப்பை முதலமைச்சர் பழனிசாமி இன்று துவக்கி வைத்தார்.மேலும் இந்தியாவிலேயே முதல் முறையாக கல்விக்காக தொலைக்காட்சி தொடங்கியதற்கு யுனிக் வேல்ட் ரெக்கார்ஸ் சார்பில் உலக சாதனைக்கான சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.மேலும் இந்த தொலைக்காட்சியின் சிறப்பம்சங்களை பற்றி முதலமைச்சர் எடுத்து உரைத்தார்.
*1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் அனைத்து மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கும் பயனுள்ள தகவலை வழங்க உள்ளது
*கல்வித்துறை சார்ந்த அரசின் அனைத்து செயல்பாட்டுகளும் மாணவர்கள் எளிதில் அறிந்துக்கொள்ள முடியும்
*மாணவர்கள் வசதிக்காக கேபிள் இணைப்பு இல்லாத பள்ளிகளில், யூடியூப் மூலம் நேரலை
*வேலைவாய்ப்பு செய்திகள், சுயத்தொழில் தொடர்பான நிகழ்ச்சிகளும் கல்வி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும்
*கல்வி உதவி தொகைக்கு விண்ணப்பிக்கும் முறை, நுழைவுத் தேர்வு குறித்த விளக்கங்கள் ஒளிபரப்பாகும்
*மேலும் மாணவர்களின் கண்டுபிடிப்புகள், கல்வியாளர்களின் கலந்துரையாடல் போன்ற நிகழ்ச்சிகள்
*யோகா நிகழ்ச்சிகள்
*கணிதம் ,ஆங்கில பயிற்சி மற்றும் நீட் போன்ற தேர்வுக்கான ஆலோசனைகள் குறித்த நிகழ்ச்சிகள்
*கல்வி தொலைக்காட்சியை அரசு கேபிள் டி.வி.யில் சேனல் எண் 200-ல் மாணவர்கள் காணலாம்