காஷ்மீரில் பனிப்பொழிவு அதிகரிப்பால் பொதுமக்கள் பாதிப்பு

காஷ்மீரில் பனிப்பொழிவு தொடங்கியுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

மொகுல் சாலை காஷ்மீரில் உள்ள பூஞ்ச், ரஜோரி மற்றும் சோபியான் ஆகிய மாவட்டங்களை இணைக்கும் முக்கிய சாலையாகும். ஆனால் பெய்து வரும் தொடர் பனிப்பொழிவால் சாலை மூடப்பட்டுள்ளது. காஷ்மீர் தலைநகரான ஸ்ரீநகர், குல்மார்க் மற்றும் பாகல்கம் ஆகிய இடங்களில் பனிப்பொழிவு அதிகமாக உள்ளது. பல இடங்களில் சாலைகளில் கொட்டியுள்ள பனியை அகற்றும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

ஸ்ரீநகரில் மைனஸ் 4.2 டிகிரி செல்சியஸில் குளிர் நிலவுகிறது. இந்த நிலையில், 31-ம் தேதிக்கு மேல் பனிபொழிவு குறையத் தொடங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

Exit mobile version