வட மாநிலங்களில் பலத்த மழை பெய்வதால் கங்கையில் வெள்ளம்

கங்கையாற்றில் அபாய அளவைத் தாண்டி வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால் உத்தரப்பிரதேசத்தின் பிரயாக் ராஜ் நகரில் ஆற்றங்கரையோரத்தில் ஆயிரக்கணக்கான வீடுகள் தண்ணீரால் சூழப்பட்டுள்ளன.

இமாச்சலம், உத்தரக்கண்ட், பஞ்சாப், அரியானா மாநிலங்களில் பலத்த மழை பெய்து வருவதால் யமுனை, கங்கையாறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. உத்தரப்பிரதேசத்தில் கங்கை, யமுனை ஆறுகள் ஒன்று சேரும் பிரயாக்ராஜ் நகரில் அபாய அளவைத் தாண்டி வெள்ளம் பாய்கிறது. இதனால் ஆற்றின் கரையோரத்தில் உள்ள ஆயிரக்கணக்கான வீடுகளைத் தண்ணீர் சூழ்ந்துள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் இருந்து ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றப்பட்டுப் பாதுகாப்பான வேறிடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

Exit mobile version