தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம், கபிஸ்தலம், ஐயம்பேட்டை, பசுபதிகோவில் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வெயில் இருந்த போதும் காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ந்த வானிலை நிலவுகிறது. வெயிலுடன் கன மழை பெய்ததால் மக்கள் ஆச்சரியத்துடன் ரசித்தனர். மழையால் நிலத்தடி நீர் உயர்ந்துள்ளதாக பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
இதேபோல் நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் தொடங்கிய தென்மேற்கு பருவ மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இந்தநிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் அடுத்த 48 மணி நேரத்திற்கு நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்யும் என அறிவித்துள்ளது. இதனால் உதகை, கூடலூர், பந்தலூர், எமரால்டு மற்றும் அவலாஞ்சி ஆகிய இடங்களில் இடைவிடாமல் விடிய விடிய கனமழை பெய்து வருவதால், நீரோடைகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.