அபாயகரமான அமிலம் ஏற்றி வந்த வாகனம் சாலையில் கவிழ்ந்து விபத்து

திருச்செந்தூர் அருகே அபாயகரமான அமிலம் ஏற்றி வந்த வாகனம் சாலையில் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரியில் உள்ள ஒரு தனியார் தொழிற்சாலையில் இருந்து ஹைடிரோ குளோரிக் என்ற அபயகரமான அமிலத்தினை ஏற்றி கொண்டு டேங்கர் லாரி ஒன்று சென்னைக்கு சென்று கொண்டிருந்த போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த வீட்டின் சுவர் மீது மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. லாரியில் இருந்த சுமார் 10 டன் எடை கொண்ட அமிலம் சாலையில் புகை மன்டலத்துடன் கசிய துவங்கியதால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளித்ததுடன் அங்கு வசிக்கும் மக்களுக்கு மூச்சு திணறலும் ஏற்பட்டது. இதனையடுத்து 4 க்கு மேற்பட்ட தீயணைப்பு வண்டிகள் அப்பகுதிக்கு விரைந்து வந்து அமிலத்தினை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டன. இதனால் திருச்செந்தூர் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Exit mobile version