தஞ்சாவூரில் 100 ஆண்டுகள் பழமையான முத்துப் பல்லக்கு திருவிழா ஏராளமான பக்தர்கள் முன்னிலையில் வெகு விமரிசையாக நடைபெற்றது.
திருஞானசம்பந்தரின் குருபூஜை விழா ஆண்டுதோறும் வைகாசி மாதத்தில் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தஞ்சாவூரில் 100 ஆண்டுகளாக முத்து பல்லக்கு விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தஞ்சாவூரின் பிரசித்தி பெற்ற விநாயகர், முருகன் கோயில்களில் இருந்து உற்சவ மூர்த்திகள் மற்றும் ஞானசம்பந்தரின் திருஉருவ படங்களுடன் அலங்கரிக்கப்பட்ட முத்து பல்லக்குகளில் வீதி உலா நடத்தப்பட்டது. அதிகாலையில் தஞ்சை கீழவீதி, தெற்குவீதி, மேலவீதி, வடக்குவீதி வழியாக தேவாரப் பாடல்கள் இசைக்க, நாதஸ்வரம் முழங்க இந்த குருபூஜை விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. மொத்தம் 14 பல்லக்குகளில் நள்ளிரவு முதல் விடியற்காலை வரை வந்த சுவாமிகளை ஏராளமான பக்தர்கள் தரிசித்தனர்.