த.பெ.தி.க பொதுசெயலாளர் கு ராமகிருஷ்ணன் துணைவி மறைவு: இடைக்கால பொதுச் செயலாளர் தொலைபேசியில்!

தந்தை பெரியார் திராவிட கழக பொதுச் செயலாளர் கு இராமகிருஷ்ணனின் மனைவி வசந்தி உடல்நலம் குன்றி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி காலமானார். அவரது மறைவிற்கு, கு இராமகிருஷ்ணனை தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு, முன்னாள் முதல்வரும், அதிமுக இடைக்கால பொதுச் செயலாளருமான எடப்பாடி கே பழனிசாமி ஆறுதல் கூறினார். மேலும் முன்னாள் அமைச்சரும், அதிமுக தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி வேலுமணி மற்றும் கோவை மாநகர் மாவட்ட செயலாளரும், வடக்கு சட்டமன்ற உறுப்பினருமான அம்மன் கே அர்ஜுனன் ஆகியோர், கு இராமகிருஷ்னனை, அவரது வீட்டில் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.

Exit mobile version