புயல் பாதித்த 11 மாவட்டங்களில் ஜி.எஸ்.டி வரி செலுத்த ஒரு மாதம் அவகாசம் வழங்க வேண்டும் – தமிழக அரசு பரிந்துரை

கஜா புயல் பாதித்த 11 மாவட்டங்களில் உள்ள ஜி.எஸ்.டி வரி செலுத்துபவர்களுக்கு ஒரு மாதம் அவகாசம் வழங்க வேண்டும் சரக்கு மற்றும் சேவை வரி மன்றத்திற்கு தமிழக அரசு பரிந்துரை செய்துள்ளது.

கஜா புயலால் தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட 11 மாவட்டங்கள் சேதங்களை சந்தித்துள்ளன. இதனால் அந்த மாவட்டங்களில் உள்ள சரக்கு மற்றும் சேவை வரி செலுத்துவோர் கடந்த அக்டோபருக்கான வரிகளை செலுத்த இயலாத சூழல் நிலவுகிறது. இதனை கருத்தில் கொண்டு கடந்த 21-ம் தேதியில் இருந்து கட்டவேண்டிய தினசரி தாமதக் கட்டணத்தில் விலக்கு வழங்க வேண்டும் என்று சரக்கு மற்றும் சேவை வரி மன்றத்திடம் தமிழக அரசு பரிந்துரை செய்துள்ளது.

அக்டோபரில் கட்ட வேண்டிய சரக்கு மற்றும் சேவை வரியை கட்டுவதற்கு ஒரு மாதம் அவகாசம் வழங்க வேண்டும் என்றும் தமிழக அரசு சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Exit mobile version