கொடைக்கானல் நகர்ப்பகுதிக்குள் நுழையும் வெளிமாநில மற்றும் வெளிமாவட்ட வாகனங்களுக்கு வெள்ளி நீர்வீழ்ச்சி பகுதி அருகே சுங்கச்சாவடி அமைக்கப்பட்டு கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த 23ஆம் தேதி முதல் அடுத்த ஆண்டு ஜூன் 14ஆம் தேதி வரையிலான காலத்திற்கு வாகனங்களுக்கான கட்டணத்தை உயர்த்தி விடியா திமுக அரசு, அரசாணை வெளியிட்டுள்ளது. சுற்றுலா பேருந்திற்கு 200 ரூபாய் வசூலிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது 250 ரூபாயாகவும், சிறிய பேருந்துகளுக்கு 100 ரூபாய் வசூலிக்கப்பட்டு வந்த நிலையில்150 ரூபாயாகவும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோன்று மேக்ஸிகேப், மினி லாரி, டிராக்டருக்கு 70 ரூபாய் வசூலிக்கப்பட்டு வந்த நிலையில் 80 ரூபாயாகவும், வாடகை சிற்றுந்துக்கு 50 ரூபாய் வசூலிக்கப்பட்டு வந்த நிலையில், 60 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளதாக
அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வானது சுற்றுலாப்பயணிகள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.