தஞ்சை தென்னக பண்பாட்டு மையத்தில், பாரம்பரிய கலை நிகழ்ச்சியை ஆளுநர் பன்வாரிலால் புரோகித் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
தஞ்சை தென்னக பண்பாட்டு மையத்தில் ஐந்து நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில், இசை, நடனம், நாடகம், பொம்மலாட்டம், நாட்டுப்புற மற்றும் பழங்குடியினர் கலைகளின் சங்கமம் உள்ளிட்டவை இடம்பெறும். இந்த நிகழ்ச்சியில் வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு, மாநிலங்களவை உறுப்பினர் வைத்திலிங்கம், தஞ்சை மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் இம்மாதிரியான விழாக்கள், கலைகளை போற்றி பாதுகாக்கும் கலைஞர்களுக்கும் மக்களுக்கும் இடையேயான நெருக்கத்தை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளதாக கூறினார்.