சுதந்திரப் போராட்டத் தியாகிகளை அடையாளம் காண பல்கலைக்கழக துணைவேந்தர்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவு இட்டுள்ளார். குறிப்பாக இந்திய வரலாற்றில் தமிழக வரலாற்றில் மறைக்கப்பட்ட வெளியேத் தெரியாமல் இருக்கக்கூடிய சுதந்திரப் போராட்டத் தியாகிகளை நினைவு கூறும் விதமாக அவர்களைப் பற்றின ஆய்வுகளை மேற்கொள்ளுமாறு ஆளுநர் அவர்கள் உத்தரவு இட்டுள்ளார். குறிப்பாக் ஆளுநர் அவர்களின் அறிக்கையின்படி இந்த ஆய்வினை மேற்கொள்ளும் விதமாக அந்தந்தப் பகுதிகளைச் சேர்ந்த பல்கலைக்கழகங்கள் இதனை மேற்கொள்ளுமாறும் அதற்காக ஆய்வு மாணவர்கள் ஐந்து பேர்களை பயன்படுத்தலாம் என்று கூறியுள்ளார். ஒரு வருடம் காலம் இந்த ஆராய்ச்சியை மேற்கொள்ளும் மாணவர்கள் ஆய்வு செய்யலாம் என்று கூறப்பட்டுள்ளது. இந்த ஆய்வினை மேற்கொள்ளும் மாணவ மாணவிகள் ஒருவருட முடிவில் கவுரவிக்கப் படுவார்கள் என்று அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.