நர்சிங் சேர்க்கை.. அறிவிப்பு எப்போ வரும் அரசே?

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான நிலையில, அரசு மருத்துவக் கல்லூரிகளில் செவிலியர் மற்றும் துணை மருத்துவப் படிப்புகளுக்கு மாணவர்கள் சேர்க்கை எப்போது என்பது தான் தற்போது மில்லியன் டாலர் கேள்வியாகி உள்ளது. ஏன் என்றால்,  இப்போதே தனியார் மருத்துவக்கல்லூரிகள் மாணாக்கர்கள் சேர்க்கைய தொடங்கிவிட்டார்கள். பிளஸ் 2 முடிவுகள் வெளியாகும் முன்பே தேர்வு எழுதிய மாணவர்களின் செல்போன் எண்ணைத்  தொடர்புகொண்டு எங்களின் கல்லூரிக்கு வாங்க என்று ஆள்பிடிக்கும் வேலையை செய்ய துவங்கிவிட்டார்கள். ரிசல்ட் வந்ததும் விட்டு வைப்பாங்களா என்ன?

ஆனால் வழக்கம்போல அரசு மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை விசயத்தில் அலட்சியம் காட்டுவதில் தான் இன்னமும் எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என்று கூறுகிறார்கள். அதே நேரத்தில் திமுகவினர் நடத்தும் கல்லூரிகளில் சீட்டு நிறைய வேண்டும்…தனியார் கல்லூரிகளில் சேர்க்கை அதிகமானாத்தான் நமக்கு கட்டிங் வரும் என்கிற அறிவிப்பினைத் தாமதப்படுத்துகிறார்கள் என்று கல்வியாளர்கள் கூறிவருகிறார்கள்.

Exit mobile version