மாதிரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த தமிழக அரசு அரசாணை

தமிழகத்தில், மூன்று மாவட்டங்களில் மாதிரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்துவதற்கான அரசாணையை, தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இந்தியாவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு 1872 ல் தொடங்கப்பட்டது. 1881 ஆம் ஆண்டு முதல் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, 16வது மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணி, 2021 ஆம் ஆண்டு துவங்கப்படவுள்ளது. இந்த பணிகளின் போது ஏற்படும் சிக்கல்களை சரி செய்ய, அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில், மாதிரி கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

அதன்படி, தமிழகத்தில், காஞ்சிபுரம், சிவகங்கை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் வரும் ஆகஸ்ட் மாதம் 12ம் தேதி முதல், செப்டம்பர் 30ம் தேதி வரை மாதிரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்துவத்துவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. 2011ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி, தமிழகத்தின் மக்கள் தொகை 7 கோடியே 21 லட்சத்து 388 ஆயிரமாக இருந்தது. இதன்படி, மக்கள் தொகை அதிகமுள்ள மாநிலங்களில் தமிழகம் ஏழாவது இடத்தில் இருந்தது.

2021-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது ஆண்கள், பெண்கள், வயது, படிப்பு, சதுர கிலோ மீட்டருக்கு மக்களின் அடர்த்தி, அதிக மக்கள் தொகை கொண்ட மாவட்டங்கள், குறைவான மக்கள் தொகை கொண்ட மாவட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் சேகரிக்கப்பட்டு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும்.

Exit mobile version