சிங்கப்பூர், மலேசியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட 8 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் சென்னை விமானநிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது.
சிங்கப்பூர் மற்றும் மலேசியாவில் இருந்து சென்னைக்கு தங்கம் கடத்தி வரப்படுவதாக வந்த தகவலையடுத்து, மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் விமானநிலையத்தில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது கடத்தி வரப்பட்ட 7 கோடியே 83 லட்சம் ரூபாய் மதிப்பிலான 23 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. அத்துடன் 23 லட்சம் ரூபாய் மதிப்பிலான இந்தியாவில் தடை செய்யப்பட்ட DRONE எனப்படும் ரகசிய கேமரா பொறுத்தப்பட்ட குட்டி ஹெலிகாப்டர், வெளிநாட்டு கேமராக்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த கடத்தல்களில் ஈடுபட்ட சர்வதேச கடத்தல் கும்பலை சேர்ந்த 4 பேரையும், கடத்தல் நபர்களுக்கு உதவிய சுங்கத்துறை அதிகாரி ஒருவரையும் மத்திய வருவாய் புலனாய்வுதுறை அதிகாரிகள் கைது செய்து, விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த வழக்கில் மேலும் சிலரை கைது செய்ய இருப்பதாகவும் கூறப்படுகிறது.