”அயன்” திரைப்பட பாணியில் கடத்தல்! மாட்டிக்கொண்ட கடத்தல்காரர்கள்! சிக்கிய 10 கோடி!

நாட்டில் கடத்தல் வழக்குகள் அதிகரித்த வண்ணம் உள்ளன. நம்மவர்களுக்கு கடத்தல் என்றதும் சினிமாக்களே ஞாபகத்திற்கு வரும். அப்படி பல கடத்தல் படங்கள் தமிழ் சினிமாவில் அதிகம் வந்துள்ளன. அதிலும் அனைவரின் நினைவிலும் வந்து நிற்கும் திரைப்படம் “அயன்”. அத்திரைப்படம் விமான நிலையத்தில்  தங்கம், வைரம், போதைப் பொருட்கள் வெளிநாடுகளுக்கும், வெளிநாட்டிலிருந்து இந்தியாவுக்கும் கடத்தப்படுகின்றன என்பதை தெளிவாக காட்டியது. அத்திரைப்பட பாணியிலேயே தற்போது ஒரு கடத்தலும் நடந்துள்ளது. ஆனால் நமது சுங்கத்துறை அதிகாரிகளிடம் வசமாக மாட்டிக்கொண்டுவிட்டனர். என்ன நடந்தது என்று பார்க்கலாம்.

டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் தஜிகிஸ்தான் நாட்டிலிருந்து வந்த பயணிகளிடமிருந்து பத்து கோடி ரூபாய் மதிப்புள்ள ரொக்கப் பணமானது சுங்கத்துறை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது. இந்தியாவில் உள்ள எந்த விமான நிலையத்திலும் இவ்வளவு பெரிய கரண்சி கைப்பற்றப்பட்டது இல்லை, இதுதான் முதல்முறை என்றும் கூறப்படுகிறது.  குற்றம்சாட்டப்பட்டவர்கள் இஸ்தான் புல்லிற்கு விமானத்தில் ஏறச் சென்றபோது அதிகாரிகளால் தடுக்க நிறுத்தப்பட்டார். அப்பயணியின் பொருட்களை விரிவாக ஆய்வு செய்ததில் 10,06,78,410 ரூபாய்க்கு சமமான வெளிநாட்டு கரன்சி (7,20,000 அமெரிக்க டாலர் மற்றும் யூரோ 4,66,200) சுங்கத்துறை வட்டாரம் செய்தி தெரிவித்துள்ளது. குற்றம்சாட்டப்பட்ட நபர்கள் மூன்றுபேர் ஆவார்கள். அவர்களில் ஒரு சிறுவனும் அடக்கம். மேலும் அவர்களின் பயணப் பொதிகளில் வைக்கப்பட்டிருந்த காலணிகளுக்குள் வெளிநாட்டு நாணயம் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக சுங்கத் துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.

 

Exit mobile version