தங்கத்தின் விலை சவரனுக்கு 288 ரூபாய் அதிகரிப்பு

 தங்கத்தின் விலை சவரனுக்கு 288 ரூபாய் அதிகரித்து 28 ஆயிரத்து 960 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

24 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு 36 ரூபாய் உயர்ந்து 3 ஆயிரத்து 777 ரூபாய்க்கும், சவரனுக்கு 288 ரூபாய் உயர்ந்து 30 ஆயிரத்து 216 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 36 ரூபாய் அதிகரித்து 3 ஆயிரத்து 620 ரூபாய்க்கும், சவரனுக்கு 288 ரூபாய் உயர்ந்து 28 ஆயிரத்து 960 ரூபாய்கும் விற்பனையாகிறது.

அதேபோல் வெள்ளியின் விலை கிராமுக்கு 60 காசுகள் உயர்ந்து 50 ரூபாய் 30 காசுகளாகவும், ஒரு கிலோ பார் வெள்ளி 600 ரூபாய் உயர்ந்து 50 ஆயிரத்து 300 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

Exit mobile version