புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்ட உடன் தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை வாரியம் முன்னேற்பாடு நடவடிக்கைகளை மேற்கொண்ட விதம் பாராட்டுக்குரியது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இயற்கை சீற்றத்தால் தமிழ்நாடு மீண்டும் ஒரு முறை பெரும் பாதிப்புள்ளாக்கியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். புயலால் உயிரிழந்தோர் குடும்பத்திற்கும், வீடு உடைமைகள், கால்நடைகளை இழந்த மக்களுக்கும் சிகிச்சை பெறுவோருக்கும் உரிய நிவாரணமும், இழப்பீடும் விரைந்து கிடைத்திட வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.
புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்ட உடன் தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை வாரியம் முன்னேற்பாடு நடவடிக்கைகளை மேற்கொண்ட விதம் பாராட்டுக்குரியது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.