ககன்யான் திட்டம் 75-வது சுதந்திர தினத்திலோ அல்லது அதற்கு முன்னதாகவோ நிறைவேற்றப்படும் என அணுசக்தி மற்றும் விண்வெளித்துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் நாடளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
விண்வெளிக்கு இந்தியர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்தை மத்திய அரசு 2018 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தியது. இந்நிலையில் இதன் இறுதி கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. பணிகள் நிறைவு பெற்று 75-வது சுகந்திர தினத்திலோ அல்லது முன்னதாகவோ நிறைவேற்றப்படும் என விண்வெளி துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் நாடளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். மேலும் இதன் வடிவம் மற்றும் மனித தகுதி மதிப்பீடு தொடர்பான சோதனைகள் தொடக்கப்பட்டு, கிரையோஜெனிக் என்ஜின் சோதனைகள் நடந்து வருவதாக நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.