ஜி20 மாநாட்டில் 75க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்பு!

ஜி20 மாநாட்டின் தலைமை பொறுப்பை இந்தியா ஏற்று நடத்துகிறது. வரும் செப்டம்பரில் இந்தியாவில் நடைபெறும் இம்மாநாட்டை சிறப்பாக நடத்தி முடிக்க நாட்டின் 200 நகரங்களில் ஆலோசனை கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. அதன் ஒரு பகுதியாக புதுச்சேரியில் அறிவியல் 20 மாநாடு தொடங்கியுள்ளது. இதில் இந்தியா, சீனா, அமெரிக்கா உள்ளிட்ட ஜி20 உறுப்பு நாடுகள், நட்பு நாடுகளை சேர்ந்த 75க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்து கொண்டுள்ளனர். மேலும் உலகளாவில் முழுமையான ஆரோக்கியம், பசுமையான எதிர்காலத்திற்காக சுத்தமான ஆற்றலை ஏற்றுக்கொள்வது, சமூகம் மற்றும் கலாச்சாரத்துடன் அறிவியலை இணைத்தல் என்ற வகையில் விஞ்ஞானத்தின் மூலம் வரும் தீர்வுகளை செயல்படுத்துவது உள்ளிட்ட 3 தலைப்புகள் மாநாட்டில் விவாதிக்கப்பட உள்ளன.YouTube video player

Exit mobile version